ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அரங்கில் அசம்பாவிதம்!.விபத்தில் ஊழியருக்கு படுகாயம்
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (27-07-2023) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
விபத்து
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேந்த ஷங்கர் (26) என்பவருக்கு மின்சாரம் தாக்கி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு பலத்தகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வரூபம் பூஜா குமாரை ஞாபகம் இருக்கா?.. நீச்சல் குளத்தில் அவருடன் எப்படி விளையாடுறாரு பாருங்க