என்ஜாய் படம் நிச்சயம் இளைஞர்களை கவரும்: இயக்குனர் பெருமாள் காசி
எல்.என்.எச். கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.
இத்திரைப்படத்தில் மதன் குமார், டான்சர் விக்னேஷ் ஹரீஸ் குமார் நிரஞ்சனாஜீ, வி.அபர்ணா, சாய் தன்யா, ஹாசின் சாருமிசா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது இந்த கதை. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும், இளம் பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா? இல்லை.. சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா? என்பதே இந்த ‘என்ஜாய்’ சொல்லும் கதை.
அது மட்டுமில்லாமல் எவ்வாறு இந்த சமூகமும் தப்பான பாதைக்கு கொண்டு செல்கிறது என்று தோலுரித்து காட்டியிருக்காராம் இயக்குனர் பெருமாள் காசி.
இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 23ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது . இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு திகட்டாத கொண்டாட்டமாக இருக்கும் இந்த "என்ஜாய்" என படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
திவ்யா கணேஷுக்கு தொல்லை கொடுத்தது யார்? செல்லம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா