சூர்யாவின் இந்த படம் பெரிய பிளாப் தான்: ஓப்பனாக சொன்ன இயக்குனர்
எதற்கும் துணிந்தவன்
சூர்யாவின் கெரியரில் சில படங்கள் அவரை வெற்றியின் உச்சத்திற்கே கொண்டு சென்றாலும் ஒரு சில படங்களில் தோல்வி அவருக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படி கடந்த வருடம் ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களை அதிகம் ஈர்க்கவில்லை. பாண்டிராஜ் தான் அந்த படத்தை இயக்கி இருந்தார்.
படம் பிளாப் தான்
இந்நிலையில் பாண்டிராஜ் அளித்து இருக்கும் பேட்டியில் எதற்கும் துணிந்தவன் பெரிய பிளாப் ஆனது என ஓப்பனாக கூறி இருக்கிறார்.
"இதே கூட்டணியில் இன்னொரு படம் எடுங்க என்று கூட தயாரிப்பாளர் சொல்கிறார்கள். ஆனால் நான் வேறு கதைக்கு சென்றால், உங்களுக்கு தெரிந்ததை எடுங்க.. கிராமத்து கதை தான் உங்களது ப்ளஸ் அதை விட்டுட்டு ஏன் வெளியே போறீங்க என சிலர் கேட்கிறார்கள். "
"ஆடியன்ஸின் ரசனை மாறிக்கொண்டிருக்கிறது. இனி எமோஷன் எல்லாம் செட் ஆகாது என பார்த்தால்.. இன்னொரு பக்கம் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வசூல் ஈட்டுகிறது" என சொல்லி இருக்கிறார் பாண்டிராஜ்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல் நாளில் மட்டுமே இவ்வளவு வசூலை பெறுமா?- வெளிவந்த தகவல்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
