எதற்கும் துணிந்தவன் படத்தின் காட்சி ரத்து.. அதிர்ச்சியளிக்கும் செய்தி
எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் முதல் காட்சி முடிந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Etharkkum Thunidhavan FDFS Fans Celebration
இப்படத்தின் ரிலீசுக்கு முன்பு, எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்கில் திரையிடக்கூடாது என்று கூறி, பா.ம.க கட்சியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெற்று வருகிறது.
காட்சி ரத்து
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட பா.ம.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், எதற்கும் துணிந்தவன் படத்தின் காட்சியை ரத்து செய்வதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.