எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர் மாரிமுத்து
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து.
எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஏமா ஏய் என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது.
மரணம்
இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் எதிர்ச்சியை கொடுத்துள்ளது.
57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ’கண்ணும் கண்ணும், புலிவால்' என இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
