முதல் நாள் உலகளவில் ஜவான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜவான்
நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல்
இந்நிலையில், ஜவான் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே செய்துள்ள வசூல் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துள்ள ஜவான் இந்த வாரம் இறுதிக்குள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan