எதிர்நீச்சல் சீரியலை விட்டே போக நினைத்தேன்- எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஆதிரை ஓபன் டாக்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் கடந்த வார TRPயில் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்த தொடர் எதிர்நீச்சல்.
கோலங்கள் தொடருக்கு பிறகு கொஞ்சம் இடைவேளை எடுத்து இப்போது எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார் திருச்செல்வம்.
ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் மருமகள்கள், மகள் படும் கஷ்டங்களை இந்த தொடர் மிகவும் எதார்த்தமாக காட்டி வருகிறது.
அண்மையில் தொடரில் ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் நடந்த டிராக் பரபரப்பாக ஓடியது, இதனால் TRPயும் எகிறியது.
சத்யா ஓபன் டாக்
ஆதிரை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சத்யா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, ஆரம்பத்தில் சீரியலால் எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோது, நான் இந்த தொடரில் நடிப்பதை விட்டே போய் விடலாம் என்று நினைத்தேன், பிறகு மக்கள் என்னை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது என பேசியுள்ளார்.
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுப்பதற்கு காரணம் என்ன?- ஓபனாக கூறிய நடிகை பிரியாமணி

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
