எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மாரிமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.
இடையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழக்க அவரது கதாபாத்திரத்தில் வேல ராம மூர்த்தி நடித்து வந்தார்.
ஆனால் அதன்பின் சீரியலின் டிஆர்பி குறைந்து கொண்டே வந்தது.
எமோஷ்னல் பதிவு
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் எதிர்நீச்சல் 2ம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சில கதாபாத்திரத்தின் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் நந்தினியின் மகளாக நடித்துவந்த தாரா மாற்றப்பட்ட நிலையில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.
முதல் பாகத்தில் தாராவாக நடித்தவர் தனது இன்ஸ்டாவில், திருச்செல்வம் அங்கிள் வேண்டுமென்றே இந்த தொடரில் இருந்து என் நீக்கிவிட்டதாக கூறி அவர் போட்ட பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.