15 வருட திருமண வாழ்க்கை, ஸ்பெஷல் நாளில் சூப்பர் பதிவு போட்ட எதிர்நீச்சல் சீரியல் புகழ் கனிகா- குவியும் வாழ்த்து
நடிகை கனிகா
2002ம் ஆண்டு 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் கனிகா.
அப்படத்தை தொடர்ந்து மாதவனுடன் எதிரி, சேரனுடன் ஆட்டோகிராப் மற்றும் அஜித்துடன் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் ஆனார்.
தமிழ் சினிமா தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்தார்.
நாயகியாக நடிப்பதை தாண்டி பிரபல ஹீரோயின்களான ஜெனிலியா, சதா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

லேட்டஸ்ட் பதிவு
ஷ்யாம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கனிகா தற்போது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அழகிய பதிவு ஒன்று போட்டுள்ளார்.
அவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகினவாம். இதனை கொண்டாடும் வகையில் அழகிய வீடியோவுடன் அவர் பதிவு ஒன்று போட அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
இனி Colors Tamil தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல்- ரசிகர்கள் ஷாக் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    