எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ
எதிர்நீச்சல் சீரியல்
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் கடந்த வாரம் ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈஸ்வரி நலமாக வீட்டிற்கு திரும்பினாலும், கடந்த 3 ஆண்டுகளில் நடந்த எந்த சம்பவமும் அவருக்கு நினைவில்லை என மருத்துவர்கள் கூறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டதால், ஆதி குணசேகரனால் தனக்கு நடந்த கொடுமைகளையும் மறந்துவிட்டார்.
ராவணன் ஆதிமுத்து
இது ஒரு பக்கம் இருக்க, கலெக்டர் மதிவதனி, ஜனனிக்கு போன் செய்து, மிகப்பெரிய கொடூரமான எதிரி ஒருவன் வரப்போகிறான் என எச்சரிக்கிறார். அவர் வேறு யாருமில்லை, ராவணன் ஆதிமுத்துதான். இந்த கதாபாத்திரம் எப்போது என்ட்ரி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வந்துவிட்டது.

இந்த ராவணன் ஆதிமுத்து என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின் தக்ஷின் என்பவர் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். மேலும் சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராவணன் ஆதிமுத்துவாக நடிக்கும் நடிகர் அஸ்வின் தக்ஷினின் புகைப்படங்கள் இதோ..




148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri