கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்- வெளிவந்த போட்டோ, ஏன் தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் சன், கலைஞர், ஜெயா என பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
அதில் ஹிட்டான சீரியல்கள் என்றால் மெட்டி ஒலி, கோலங்கள், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, இப்போது எதிர்நீச்சல் என வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதிலும் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பட்டிதொட்டி எங்கும் கலக்குகிறது, அதில் ஆணாதிக்கத்தால் கஷ்டப்படும் பெண்கள் பலரும் தொடருக்கு பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.
கொண்டாடிய சீரியல் குழு
தற்போது சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஏன் என்றால் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?