எதிர்நீச்சல் சீரியல் படப்பிடிப்பில் இருந்து வந்த போட்டோ.... சோகத்தில் ரசிகர்கள், என்ன புகைப்படம் பாருங்க
எதிர்நீச்சல்
கோலங்கள் என்ற படு மெகா ஹிட் தொடரை கொடுத்த திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல்.
700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த தொடர் கதை, வசனம், திரைக்கதை மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
குணசேகரனால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது தைரியமாக தங்களது நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்கள். இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் தொடரின் கிளைமேக்ஸ் என கூறப்படுகிறது.
வைரல் போட்டோ
தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்பதை கேட்டே படு சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்னும் சோகத்தை கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.
அதாவது எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக உட்கார்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அப்பத்தாவும் உள்ளார், ஆனால் குணசேகரன் மற்றும் ஈஸ்வரியை மட்டும் காணவில்லை.