நடிகர் விஜய்யிடம் கதை கூறியுள்ள எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம்- பின் நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை தொடர் வெளிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரை கோலங்கள் சீரியல் புகழ் இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினியை சந்தித்தது குறித்தும் அவர் கதை கேட்க அப்போது பதற்றத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையை கூறியதால் அவர் இது எனக்கு சம்பந்தப்பட்ட கதை இல்லை என்று கூறியதை தெரிவித்திருந்தார்.
விஜய்யுடன் பழக்கம்
இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு முன்பு இவர் இளையராஜாவிடம் Sound Engineer ஆக பணிபுரிந்திருக்கிறார், அந்த நேரம் காதலுக்கு மரியாதை படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் விஜய்யை சந்தித்த திருச்செல்வம் ஒரு கதையை கூறியிருக்கிறார், ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியாமல் போய்விட்டது என இயக்குனர் கூறியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி காமெடியன் மட்டுமில்லை.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?