நீதிபதியிடம் குணசேகரன் கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கும் பெண்கள், கடைசியில் பேரதிர்ச்சி... எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த நாள் வந்துவிட்டது.
கிளைமேக்ஸ் இல்லை, தவறு செய்யும் குணசேகரன் எப்போது சிக்குவார் என்பது தான் அனைவரின் ஆதங்கமாக இருந்தது.
தற்போது அப்பத்தா கொலை, ஜீவானந்தம் மனைவி இறப்பு, தர்ஷினி கடத்தல், ஆதிரையை வர்புறுத்தி திருமணம் செய்ய வைத்தது என அடுக்கடுக்கான விஷயங்களால் இப்போது குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக யாரும் எதுவும் சொல்ல கூடாது என அவரது தம்பிகள் வீட்டிப் பெண்களை மிரட்டியுள்ளார்கள். ஆனால் குணசேகரன் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் அவர்கள் உள்ளார்கள்.
இன்றைய புரொமோ
இன்றைய புரொமோவில் ஈஸ்வரியை தொடர்ந்து ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி 3 பேரும் குணசேகரன் செய்த கொடுமைகளை நீதிபதியிடம் கொட்டித்தீர்க்கிறார்கள்.
அதோடு புரொமோவின் கடைசியில் இத்தனை நாள் இறந்துவிட்டார்கள் என நினைத்த அப்பாத்தா வருகிறார். இதனால் குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
இதோ பரபரப்பான புரொமோ,