அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
திருச்செல்வம் அவர்கள் சன் டிவியில் கோலங்கள் தொடருக்கு பிறகு இயக்கிவரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
முதல் பாகம் முடிந்த அதே வேகத்தில் 2ம் பாகத்தை தொடங்கி இதில் பெண்கள் சாதிப்பது போல் கதைக்களம் அமைத்து வருகிறார்.
ஆனாலும் வில்லன்கள், பெண்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு இன்னும் சரியான தண்டனை கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது.
குண்டாஸ் வழக்கு போட்ட பிறகும் குணசேகரன் கைதாகாமல் இன்னும் தலைமறைவாக சுற்றி வருகிறார்.

புரொமோ
கடந்த சில வாரங்களாக பெண்கள் ஆரம்பிக்கும் கடை திறப்பு விழா நடக்குமா இல்லையா என அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வந்தது.
எப்படியோ குணசேகரன் பிளான் எல்லாம் பிளாப் ஆகி ஜனனி வெற்றிகரமாக கடையை திறந்துவிட்டார். ஆனால் அவர்கள் கடை நடத்துவது பிடிக்காத குணசேகரன் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை அவர்களுக்கு கொடுத்த வண்ணம் உள்ளார்.

இன்றைய எபிசோட் புரொமோவில், விசாலாட்சி தனது முதல் மருமகள் ஈஸ்வரி நினைத்து கண்ணீர்விட்டு அழுகிறார், மற்ற மருமகள்களும் அவர் சொல்வதை கேட்டு எமோஷ்னல் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் கதிர், அறிவுக்கரசிக்கு போன் செய்து அவர்கள் நாளைக்கு கடை திறக்க கூடாது ஏதாவது செய் என கூறுகிறார்.