ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
தொடரில் குணசேகரனால் தாக்கப்பட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அந்த உண்மை இன்னும் வெளிவரவில்லை.
அதற்குள் தான் நினைத்ததை சாதிக்க குணசேகரன் தனது மகன் தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் செய்ய நிறைய வேலைகள் செய்து வருகிறார்.
ஜனனியோ பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்க அவரும் ஒரு பக்கம் போராடுகிறார்.
புரொமோ
ஜீவானந்தம் உயிரைக் கொடுத்தாவது பார்கவியை மண்டபத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என போராடுகிறார். இதற்கு நடுவில் இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தர்ஷனிடம் ஏதோ மிரட்டியிருப்பது தெரிகிறது.
எல்லோர் முன்பும் எனக்கு பார்கவி வேண்டாம், எல்லோரும் வெளியே செல்லுங்கள் என கூறுகிறார். இதைக்கேட்ட ஜனனி மற்றும் சக்தி கடும் ஷாக் ஆகிறார்கள். இதோ புரொமோ,