கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரை வீழ்த்தி வாழ்க்கையில் சாதிக்கும் அவரது வீட்டுப்பெண்களின் போராட்ட கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசியாக கதையில் ஜனனி எப்படியோ தேவசகாயத்திடம் இருந்து தப்பித்து அவர்மீது போடப்பட்ட வழக்கிலும் தப்பித்து வீட்டிற்கு வருகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார், அதற்கு பின்னால் என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பது தெரியவில்லை.
புரொமோ
தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் புதிய ஸ்பெஷல் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் பல நாட்கள் காணாமல் போன ஜனனி வீட்டிற்கு வருகிறார், அவரைக்கண்டதும் சக்தி கண்ணீர்விட்டு அழுகிறார். அடுத்து கெத்தாக ஜனனி வீட்டிற்குள் வர குணசேகரன் அன் கோ எதுவும் தெரியாதவர்கள் போல் நிற்கிறார்கள்.

பின் குணசேகரன் வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய உடை வாங்கிவந்து கொடுக்கிறார்.
திதி கொடுக்க வேண்டும் புதிய ஆடை போட்டுக்கொள்ளுங்கள் என்கிறார், அதற்கு பின்னால் என்னால் பிரச்சனை வைத்துள்ளாரோ பொறுத்திருந்து காண்போம். புதிய சீரியலின் புதிய புரொமோ,