இந்தியாவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சூப்பர்மேன் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட்.. முழு விவரம் இதோ
ஹாலிவுட் படங்கள்
2025ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படங்களின் வசூல் ஆதிக்கம் உலகளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் வலுவாக உள்ளது.
கடந்த வாரங்களில் வெளிவந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த், F1 மற்றும் சூப்பர்மேன் படங்கள் உலகளவில் மாபெரும் வசூல் சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், இந்தியாவிலும் இப்படங்களின் வசூல் மாபெரும் அளவில் உள்ளன. ஆம், கார் ரேஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட F1 திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது.
அதே போல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்பட்டுள்ள ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் திரைப்படம் ரூ. 104 கோடி இந்திய பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளது. இறுதியாக மக்கள் மனம் கவர்ந்த சூப்பர்மேன் திரைப்படம் ரூ. 40 கோடி வசூல் செய்து இருக்கிறது.

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
