தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

By Jeeva Sep 19, 2022 03:50 PM GMT
Report

பரத் 

நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர், ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. ஆனால் சமீப காலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறி வருகிறது.

இதனால் தற்போது பெரிய வெற்றி திரைப்படத்தை காத்துள்ளார் பரத். இதனிடையே தற்போது நடிகர் பரத் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து பார்ப்போம்.  

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

சுவாரஸ்யமான தகவல்கள்

39-வது வயதாகும் நடிகர் பரத் 1983 ஆம் ஆண்டு ஜுலை 21-ம் தேதி திருச்சியில் பிறந்தார். சென்னையில் உள்ள DAV பள்ளியில் படித்த பரத், 11 வயதிலே பிரத்யேக நடன பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுள்ளார். மேலும் பரத் அவரின் சிறுவயது தோழி Jeshly என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

  தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

பரத் நடிப்பில் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்-மகன். கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பரத் வெளிபடுத்திய நடிப்பு அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. மேலும் அப்படம் தான் முதன்முதலில் அவருக்கு மிக பெரியளவில் கமர்சியல் வெற்றி திரைப்படமாக அமைந்தது. கன்னடத்திலும் புத்ரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

2013 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் 555, இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிக்ஸ் பேக் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகர் பரத். முதன்முறையாக அவரின் Transformation புகைப்படம் இணையத்தில் பெரிய சென்சேஷனாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

பரத்-ன் திரைபயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அனைவராலும் பார்க்கப்படுவது காதல். இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான மிக சிறந்த விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. அப்படியான இப்படத்தில் நடிகர் பரத் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகப்பட்டதே தனுஷ் மற்றும் சாந்தனு தான். அவர்கள் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக நடிகர் பரத் இதில் நடித்து அசதியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

பல வருடமாக பெரிய ஹிட் திரைப்படம் இல்லாமல் தவித்து வந்த பரத், அந்த வேதனையை போக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ். நல்ல விமர்சனங்களை பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ஹிட்டானது. அப்படியான இப்படத்தின் வெற்றி விழாவின் போது கண்கலங்கி அழுதுவிட்டார் பரத்.

 தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பரத் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் | Facts About Actor Bharath In Tamil

பல கோடி லாபத்துடன் ரிலீஸ் ஆகும் நானே வருவேன்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US