தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள்

Report

தனுஷ் குறித்து அறிந்திராத தகவல்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று அவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தருகிறது. அதன்படி இதுவரை தனுஷ் இரண்டு முறை விருதுகளை பெற்று இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக உருவெடுத்துள்ள நடிகர் தனுஷ் நான் பலரும் அறிந்திருந்த சில ஆச்சரிய தகவல்கள் குறித்து நாம் தற்போது பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள் | Facts About Actor Dhanush In Tamil

  •  தனுஷ் என லட்ச கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வரும் அவரின் உண்மையான பெயர் அது இல்லை. அவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. சினிமாவில் ஏற்கனவே பிரபு மற்றும் பிரபு தேவா என முக்கிய பிரபலங்கள் இருப்பதால் அவர் தனுஷ் என சினிமாவில் அறிமுகமானதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள் | Facts About Actor Dhanush In Tamil

  • தனுஷ் இப்போது தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை மாஸ் காட்டிய நடிகராக அறியப்படலாம். ஆனால் அவருக்கு Hotel Management படித்துவிட்டு செஃப் ஆக வேண்டும் என பெரிய ஆசை இருந்ததாம். வீட்டில் அழுது புரண்டும் உதவாமல் காட்டயத்தின் காரணமாகவே அவர் நடிக்க வந்ததாக தனுஷ் தெரிவித்து இருந்தார்.
  • தனுஷ் ஒரு தீவிர சிவன் பக்தராம், அவரின் இரண்டு மகன்களான யத்ரா மற்றும் லிங்கா இருவருக்கும் சிவலிங்கத்தின் இணையான பெயரையே வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள் | Facts About Actor Dhanush In Tamil

  •  நடிகர் தனுஷ் முதன்முதலில் இந்தியளவில் சென்செஷனாக பேசப்பட்டது கொலவெறி பாடல் மூலம். 3 படத்தில் இடம்பெற்ற அப்பாடலை நடிகர் தனுஷ் தான் எழுதியிருந்தார், மேலும் அப்பாடலை எழுத தனுஷ் வேறும் 35 நிமிடம் மட்டுமே எடுத்து கொண்டாராம்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள் | Facts About Actor Dhanush In Tamil

  • தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக அறியப்பட்டவர்கள் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஐஸ்வர்யா தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் ஆவார். அவர்களின் காதல் கதை காதல் கொண்டேன் திரைப்படத்தின் முதல் நாள் காட்சியில் தான் தொடங்கியுள்ளது. அப்படத்தை பார்த்துவிட்டு ஐஸ்வர்யா பூங்கொங்த்து அனுப்பியது மட்டுமின்றி அவருடன் இணைந்து இருக்குபடி கேட்டு கொண்டாராம்.  

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரான தனுஷ் குறித்து நாம் பலரும் அறிந்திராத தகவல்கள் | Facts About Actor Dhanush In Tamil

சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்த போது மகாலட்சுமி ரவீந்தர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US