நவரச நாயகன் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்.. Facts About Karthik
நவரச நாயகன் கார்த்திக்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் காதல் மன்னனாகவும் வலம் வந்தார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக அந்தகன் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. நடிகர் கார்த்திக் குறித்து நம்மில் பலருக்கும் சில விஷயங்கள் தெறித்திருக்கூடும். ஆனால், அவரை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பார்க்கவிருக்கும் பதிவு தான் இது..
Facts About Karthik
1. நடிகர் முத்துராமின் மகனான இவர் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற் பெயர் முரளி கார்த்திகேயன் ஆகும். 1970களில் தமிழ் சினிமாவை கலக்கிய முத்துராமன் நவரச திலகம் என்றும், 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகர் கார்த்திக் நவரச நாயகன் என்றும் அலைபட்டனர்.
2. தான் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியடைந்த காரணத்தினால் நடிகர் கார்த்திக் அவர்களுக்கு சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழக அரசின் விருதை எம்.ஜி.ஆர் வழங்கினார். கார்த்திக் நடித்த முதல் படம் மாபெரும் வெற்றியடைந்திருந்தாலும், அப்படத்தை அவருடைய தந்தையால் பார்க்கமுடியவில்லை. ஆம், அப்படம் வெளிவருவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். இதை எம்.ஜி.ஆர் கூட மேடையில் வருத்தத்துடன் கூறியிருப்பார்.
3. அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நடித்த பல படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தன. இதனால், இவருக்கு பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமும் சேரவில்லை. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம் திரைப்படம் வெறும் 20 நிமிடம் மட்டுமே நடித்திருந்தார் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அந்த படத்திலிருந்து தான் இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாக துவங்கியது.
4. 1988ஆம் ஆண்டு சோலைக்குயில் எனும் படத்தில் தன்னுடைய இணைந்து நடித்த நடிகை ராகினியை காதலித்து அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இதன்பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய மனைவியில் சொந்த தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
5. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகர் என்றும் தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்திக்கிற்கு பெயர் உண்டு. ஆம், அமரன் எனும் படத்தில் இடம்பெற்ற 'வெத்தல போட்ட சொக்குல' பாடலை பாடி பின்னணி பாடகராக அறிமுகமானார் கார்த்திக். இதுவே தமிழ் சினிமாவின் முதல் காண பாடல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்பின் பல படங்களில் இவர் பாடிய பாடல் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.