எம். ஆர் . ராதா குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்
எம். ஆர் . ராதா
தமிழ் சினிமாவின் 60 ஆண்டுகளில் புரட்சி தலைவர் மற்றும் நடிகர் திலகத்திற்கு இணையாக பேசப்பட்டவர் நடிகவேல் எம் ஆர் ராதா. தன் கருத்து பேச்சாலும் கம்பீரமான குரலாலும் அனைத்து மக்களை கவர்ந்திருந்தவர். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். மேலும் இவர் தனது நாடக மேடை நடிகராகவும் பெரியளவில் புகழ் பெற்றிருந்தார்.
அப்படியான தமிழ் திரையுலகின் ஜாம்பவானான எம். ஆர் . ராதா குறித்த அறிந்திராத சில தகவல்கள் குறித்து பார்ப்போம்.
சுவாரஸ்ய தகவல்கள்
1966 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பாக சிறந்த நடிகராக எம். ஆர். ராதா தேர்தெடுக்கப்பட்டார். அவருக்கு அப்போது கவர்னர் பரிசளிப்பதாக இருந்தது, ஆனால் எம். ஆர். ராதா மொழி தெரியாத கவர்னர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை, எனவே அந்த விருதை அவர் கையில் வாங்க மாட்டேன் என மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா.
எம்.ஜி.ஆர்-யை அவரின் ராமாவரம் தோட்டத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்.ஆர்.ராதா, இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிகிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிச்சிருக்காங்க நானும் சாகலை, ராமசந்திரனும் சாகல, இதுல எல்லாமா டூப்ளிகேட் வருது? என வேடிக்கையாக பதிலளித்தாராம்.
நடிகராக இருப்பதை மறைத்து தான் ஒரு மெக்கானிக் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டாராம் எம்.ஆர்.ராதா. எம்.ஆர். இராதாவிற்கு சரஸ்வதி, தனலெட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், பேபி அம்மால் ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்று கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டாா், இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ராதிகா ஆவார்.
எம்.ஜி.ஆர் கொலை முயற்சி சர்ச்சைக்கு பின் எம்.ஆர்.ராதா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் பல ஆண்டுகளாக சந்தித்துகொள்ளவே இல்லை. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பு நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் திருமணத்தில் கிடைத்தது. அப்போது அவர்கள் சந்தித்து கொண்டு கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். அந்த சந்திப்பை ஆபூர்வ சந்திப்பு என அப்போதைய பத்திரிக்கைகளில் எழுதினர்.
நடிகர் செந்தில் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே