80களின் கனவு நாயகன் நடிகர் மைக் மோகனின் சில நிஜ உண்மைகள்- ஓர் பார்வை
1980களில் தனது சாதுவான முகத்துடன் அன்றைய பெண்களின் கனவுக் கண்ணன் என்றும் மைக் மோகன் என்றும் வெள்ளி விழா நாயகன் என்றும் கோகிலா மோகன் என்றும் புகழப்பட்டவர் நடிகர் மோகன்.
இவரின் படங்கள் குறித்து நாம் அறிந்திருப்போம், ஆனால் இவரைப் பற்றிய சில நிஜ உண்மைகளை பார்ப்போம்.
நடிகர் மோகன் அவர்களின் தந்தை உடுப்பியில் பிரபலமான ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
தனது ஓட்டலுக்கு சாப்பிட வந்த நாடகத்துறையை சேர்ந்த திரு பி.வி.கரந்த் என்பவருக்கு மோகனை பார்த்த உடனே பிடித்துப் போனதால் இவரை நாடக நடிகராக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மோகனின் நாடக திறமையை பற்றி அறிந்த இயக்குனர் பாலுமகேந்திரா தனது கோகிலா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறார். அப்பட வெற்றியே கோகிலா மோகன் என்றழைக்கப்பட்டார். மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அப்படம் ஹிட் என்பதால் பெரும்பாலும் பாடகராகவே நடித்து மைக் மோகன் என்றழைக்கப்பட்டார்.
எல்லா படங்களிலும் மோகனின் அந்த அற்புதமான குரலுக்கு சொந்தக்காரராக இருந்தவர் நடிகர் விஜய்யின் தாய்மாமனும் பாடகருமான திரு எஸ்.என். சுரேந்திரன் தான். கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வசனம் எழுதி வெளிவந்த பாசப்பறவைகள் என்ற படத்தில் மட்டும் சொந்தக்குரலில் பேசி நடித்தார்.
மோகனின் 74 படங்களுக்கு குரல் கொடுத்த சுரேந்தரும், இவரும் இதுவரை ஒருநாள் கூட பேசிக்கொண்டதே இல்லை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.
ஹீரோவாக அறிமுகமாகி இவர் நடிக்க தொடங்கிய முதல் மூன்று வருடங்களில் தொடர்ந்து 300 நாட்கள் ஓடிய 3 வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே ஹீரோ மோகன் என்ற பெருமையை பெற்றார்.
ஒரே வருடத்தில் 19 படங்களில் தினமும் 18 மணி நேரம் நடித்து ஒரே நாளில் 3 படங்கள் வெளியாகி வெற்றிவிழா கொண்டாடிய நாயகனும் இவரே. பல படங்கள் வெள்ளிவிழா கண்டாலும் எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் ஏன் பிறந்தநாளை கூட கொண்டாடாமல் எளிமையாக வாழ்ந்துள்ளார்.
அந்த காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்த மோகனை திருமணம் செய்ய பல நாயகிகள் போட்டி போட்டுள்ளனர். அதில் ஒரு நாயகி காதலை வெளிப்படுத்த அதை அவர் ஏற்காத கோபத்தில் மோகனுக்கு எய்ட்ஸ் என்ற கொடுமையான நோய் உள்ளதாக பரபரப்பிவிட்டு சினிமாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
1987ம் ஆண்டு கௌரி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் மோகனுக்கு ஆகாஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். ஹீரோவாக புகழின் உச்சியில் இருந்தபோதே விதி என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் 1999ம் ஆண்டு அன்புள்ள காதலன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். திரைத்துறையை விட்டு நீண்டகாலம் விலகி இருந்தபோது அச்சம் மடம் நானம், செல்வங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களை தயாரித்ததோடு சமூக சேவைகளையும் செய்து வந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது.
தொகுப்பாளினி அர்ச்சனாவின் சொந்த வீட்டின் அழகை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு அழகான வீடு, வீடியோவுடன் இதோ