ரஜினி பற்றி இதெல்லாம் தெரியுமா? Facts About Rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
பூர்வீகம்
ரஜினிகாந்த் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர் தான். அவரது அப்பா Ramoji Rao Gaikwad மற்றும் Jijabai மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
சம்பளம்
நடிகராக வரும் முன் ரஜினிகாந்த் கூலி, கார்பெண்டர் மற்றும் பஸ் கண்டக்டர் ஆக பணியாற்றி இருக்கிறார். அப்போது அவரது சம்பளம் வெறும் 750 ருபாய் தான். ஆனால் இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் அவர் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் ஒருவர்.
நிஜ பெயர்
ரஜினிகாந்தின் நிஜ பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவர் சினிமாவுக்காக ரஜினி என பெயரை மாற்றிக்கொண்டார்.
காதல் திருமணம்
ரஜினி அவரை விட 8 வயது குறைத்த லதா ரங்காச்சாரியை காதல் திருமணம் செய்துகொண்டார். காலேஜ் மேகசினுக்காக ரஜினியை பேட்டி எடுக்க வந்த லதாவுடன் ரஜினி 1981ல் காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது லதா ரஜினிகாந்த் சென்னையில் தி ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.
மகள்கள்
ரஜினிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2022 தொடக்கத்தில் விவாகரத்து செய்துவிட்டார்.
இரண்டாம் மகள் சௌந்தர்யா முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்த நிலையில் 2019ம் வருடம் விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகனுக்கு வீர் ரஜினிகாந்த் என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
நடிப்பு தவிர..
ரஜினி நடிப்பால் சூப்பர்ஸ்டார் பட்டம் பெற்றாலும், அவர் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து இருக்கிறார்.
மற்ற மொழிகள்
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் ரஜினி நடித்து இருக்கிறார். பெங்காலியில் Bhagya Debata என்ற படத்தில் ரஜினி நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் ஆங்கிலத்தில் Bloodstone என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
ஜப்பானில் பிரபலம்
ரஜினிகாந்திற்கு ஜப்பானில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி படத்தை பார்ப்பதற்கென்று ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வந்து FDFS ஷோ பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் பிரபலம்.
அரசியல்
ரஜினிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்த நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நீண்ட காலமாக அழைத்து வந்தார்கள். ஆரம்பத்தில் அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி அதன் பின் திடீரென பின்வாங்கிவிட்டார். அதனால் ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தார்கள்.
பாடகி மஹதியா இது, இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?- வீடியோவுடன் இதோ