நடிகர் சிலம்பரசன் பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்.. Facts About Silambarasan
நடிகர் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி தற்போது 39 வயது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிலம்பரசன்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
நடிகர் சிலம்பரசன் குறித்து பல விஷயங்கள் நமக்கு தெறித்துருக்கலாம். ஏன், தன்னை பற்றிய பல விஷயங்களை அவரே தன்னுடைய ரசிகர்களுடன் பல மேடையில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால், சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி மற்றும் பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய சிம்புவின் Facts குறித்து பார்க்கவிருப்பது தான் இந்த பதிவு..
Facts About STR
1. நடிகர் சிம்புவின் பயன்படுத்தும் அணைத்து வாகனங்களிலும் 6ஆம் நம்பர் இருக்குமாம். ஏனென்றால் அது சிம்புவின் லக்கி நம்பர் என்று கூறப்படுகிறது.
2. இவருக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ மற்றும் மார்கன் ப்ரீமன் தானாம். அதே போல் மிகவும் பிடித்த ஹாலிவுட் படம் The Ten Commandments தானாம்.
3. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பதை நம்மில் பலரும் அறிவோம். ஆனால், அவர் 2002ல் ஹீரோ ஆவதற்கு முன்பே பாடகராகிவிட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம், சொன்னால் தான் காதலா எனும் படத்தில் Chukkumala எனும் பாடலை பாடி தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானார் சிம்பு.
4. சிம்பு என்றால் சூப்பராக நடனம் ஆடுவார் என்பது தமிழ் திரையுலகிற்கே தெரிந்த ஓர் விஷயம் தான். ஆனால், இப்படியே கடுமையான நடனம் ஆடி கொண்டிருந்தாள், வருங்காலத்தில் உங்களால் நடக்கக்கூட முடியாது என்று சிம்புவிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களுக்காக இன்னும் கடுமையாக நடனம் ஆடி வருகிறார் சிம்பு.