நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள்.. Facts About Sivaji Ganesan
நடிகர் திலகம்
நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்று தான் தமிழ் சினிமாவில் சிவாஜியை அடையாளப்படுத்தி கூறுவார்கள். அந்த அளவிற்கு தனது நடிப்பு அரக்கனாக திரையில் வாழ்ந்துள்ளார்.
பராசக்தியின் துவங்கிய இவருடைய பயணம் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முடிந்தது. ஆனால், இன்று வரை தன்னுடைய நடிப்பின் மூலம் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் வாழ்ந்து வருகிறார் சிவாஜி.
இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் பற்றி நம்மில் பலருக்கும் சில விஷயங்கள் தெரிந்திருக்க கூடும். ஆனால், அவரை பற்றிய இதுவரை நம்மில் பலருக்கும் தெரிந்துகொள்ளாத விஷயங்களை குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
Facts About Sivaji Ganesan
1. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இயற் பெயர் விழுப்புரம் சின்னையா கணேசன் ஆகும். இவருக்கு சிவாஜி எனும் பெயரை பெரியார் தான் வைத்துள்ளார்.
2. அனைவருக்கும் நடிகராக மட்டுமே தெரிந்த சிவாஜி கணேசன், தன்னுடைய ரத்தபாசம் எனும் படத்தை இயக்கி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். 1980ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாதியை வேறொரு இயக்குனர் இயக்கியுள்ளார். ஆனால், அதன்பின் எதோ சில காரணங்களால் அந்த இயக்குனர் இப்படத்தை இயக்கவில்லையாம். இதனால், சிவாஜியே இப்படத்தை இயக்கியுள்ளார்.
3. பாடல்களே இல்லாமல் கைதி போல் உருவாகும் படங்கள் தற்போது தான் வெளியாகிறது என்று பலருக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், 1954ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த அந்த நாள் படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெற்றிருக்காத. இதை முதன் முதலில் சினிமாவில் செய்த பெருமையும் சிவாஜியை மட்டுமே சேரும்.
4. பல வேடங்கள் போட்டு நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய நடிகர் சிவாஜி கணேசன் முதன் முதலில் போட்டது பெண் வேடம் தானாம். ஆம், ராமாயணம் நாடகத்தில் சீதை வேடம் தான் முதன் முதலில் சிவாஜி போட்டுள்ளாராம்.
5. சிவாஜி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இரத்தத்திலகம். இப்படத்தின் வெற்றிக்காக சிவாஜிக்கு அவருடைய ரசிகர்கள் துப்பாக்கி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்கள். அவர்களுடைய இந்த பரிசு படத்தின் வெற்றியை விட அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu
