கடின உழைப்பால் டாப் நாயகன் ஆன நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி இதெல்லாம் தெரியுமா?
சிவகார்த்திகேயன்
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு பிரபலம்.
விஜய் தொலைக்காட்சி Stand Up காமெடியனாக களமிறங்கிய இவர் அந்த தொலைக்காட்சியிலேயே Boys Vs Girls Season 2, Jodi Number One Season 5, Airtel Super Singer 3, Koffee with Siva என தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
பின் விஜய் தொலைக்காட்சியின் 5வது மற்றும் 6வது விஜய் அவார்ட்ஸ் விருது விழாவை தொகுத்து வழங்கினார்.
சரி சினிமாவை தாண்டி சிவகார்த்திகேயனின் சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.
சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வர வேண்டும் என்ற ஆசை இல்லை, அவரது அப்பாவை போல போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என தான் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது அப்பா இறக்க பின்பே சினிமாவில் நுழைந்துள்ளார்.
சினிமாவில் நுழையும் போது அவருக்கு இந்த துறையில் ஒருவரை கூட தெரியாது, அவரது திறமையே இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார்.
அம்மாவின் செல்ல மகனாக இவர் அம்மா பார்த்த தனது மாமா மகளையே திருமணம் செய்தார். ஆர்த்தி என்பவருடன் 2010ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடக்க ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் அறிமுகமானாலும் சிவகார்த்திகேயன் ராஜு சுந்தரம் இயக்கிய ஏகன் திரைப்படத்தில் அஜித்துடன் சிறிய ரோலில் நடித்துள்ளார். இறுதிக்கட்ட எடிட்டிங்கில் சிவகார்த்திகேயன் காட்சி கட் செய்யப்பட்டது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியால் அப்பட தயாரிப்பாளர் மதன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கராத்தேவில் க்ரீன் பெல்ட் பெற்றவர் சிவகார்த்திகேயன்.
அவரது அப்பாவால் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார் சிவா, காரணம் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அவரது அப்பா வர ஒப்புக் கொண்டதால் ஒரு பரிசாக பிளான் பெல்ட் அவருக்கு கொடுக்கப்படடுள்ளது.
மெரினா படத்திற்காக 2012ம் ஆண்டு மாநில விருது பெற்றார். அடுத்து விஜய் அவார்ட், எடிசன் அவார்ட், சைமா அவார்ட், விஜய் அவார்ட்ஸ் என நிறைய விருதுகளை பெற்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2018ம் ஆண்டு கனா என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார்.
சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே 2015ம் ஆண்டு வெளியான கன்னட படமான Vajrakaya என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றி டாப் நடிகர் சிவராஜ்குமாருடன் நடனம் ஆடியிருந்தார்.
சிறந்த நாதஸ்வர கலைஞர்களான சுப்ரமணியம் பிள்ளை, நீடமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் சிவகார்த்திகேயனின் கொள்ளு தாத்தாக்கள்.
நடிகை மீனா என்னை ஏமாத்திட்டாங்க- கண்கலங்கி அழுத பிரபலம், என்ன ஆனது?