சூர்யாவின் பெயரை மாற்றி வைத்த பிரபலம் யார் தெரியுமா? Facts About Suriya
நடிகர் சூர்யா தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் பெற்றிருக்கிறார். தேசிய விருது வாங்கிய நடிகரான அவரை பற்றி சில முக்கிய facts இதோ.
நிஜ பெயர்
நடிகர் சிவகுமாரின் மகனாக 1975ல் ஜுலை 23ம் தேதி பிறந்தார் சூர்யா. அவரது உண்மையான பெயர் 'சரவணன்' தான். சினிமாவுக்காக அவர் பெயரை மாற்றி கொண்டார்.
இயக்குனர் மணிரத்னம் தான் அவரது பெயரை மாற்றியது. ஏற்கனவே சரவணன் என ஒரு நடிகர் அப்போது முன்னணியில் இருந்தார் என்பதால் இப்படி செய்தார்.
படிப்பு, வேலை
சென்னை PSBB பள்ளி, St. Bede's Anglo Indian Higher Secondary School ஆகிய இடங்களில் பள்ளி படிப்பையும், அதன் பின் லயோலாவில் கல்லூரி படிப்பை முடித்தார் சூர்யா.
தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என்பதை மறைத்து அவர் ஒரு கார்மென்ட்கம்பெனியில் வேலை செய்தார்.
ஜோதிகாவுடன் திருமணம்
நடிகை ஜோதிகாவுடன் ஆரம்பத்தில் நட்பாக சூர்யா பழகிய நிலையில், அதுவே காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் அதன் பின்ஏற்றுக்கொண்டனர். அதற்கே 4 வருடமாக சூர்யா காத்திருந்தார்.
2006ல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு தற்போது தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டம்
நடிகர் சூர்யா ஆரம்பகாலத்தில் அதிகம் விமர்சனங்களையும் கஷ்டத்தையும் சந்தித்து இருக்கிறார். நடனம் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் வீக் ஆக இருந்ததால் அவரது confidence லெவலுக்கு குறைவாக தான் இருந்திருக்கிறது. அதற்கு பின் படிப்படியாக திறமையை வளர்ந்து கொண்டு தற்போது உச்ச நடிகராக வளர்ந்து இருக்கிறார்.
தேசிய விருது
சூர்யா இதற்கு முன் மாநில விருது உட்பட பல விருதுகள் வாங்கி இருந்தாலும் அவர் சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வென்றது தான் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
Also Read: பிக் பாஸ் 6ல் நுழையும் ஜீ தமிழின் முக்கிய சீரியல் நடிகை! எதிர்பார்க்காத ஒருவர்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu
