விஜய் சேதுபதி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்! இதெல்லாம் தெரியுமா?
எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி கோலிவுட்டில் நுழைத்து தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் தற்போது வில்லன், ஹீரோ, கெஸ்ட் ரோல் என கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதி பற்றி அதிகம் அறியப்படாத சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
சினிமாவுக்கு முன் துபாய் வேலை
விஜய் சேதுபதி சினிமாவில் நுழையும் முன்பு அவர் சொந்த ஊரில் பல கஷ்டமான வேலைகளை செய்து, அந்த சம்பளம் போதாமல் துபாய்க்கு சென்று வேலை செய்தார்.
இங்கு கிடைப்பதை விட அங்கு மூன்று மடங்கு சம்பளம் கிடைக்கிறது என்பதால் குடும்பத்தை காப்பாற்ற அவர் துபாய்க்கு சென்று வேலை செய்தார்.
ஜெசி உடன் காதல்
விஜய் சேதுபதி கஷ்டப்படும் காலத்திலேயே ஜெசி என்ற பெண்ணை சந்தித்து அவரை காதலித்து அதன் பின் திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு குழந்தைகள் - சூர்யா, ஸ்ரீஜா
விஜய் சேதுபதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மகனுக்கு சூர்யா என்றும், மகளுக்கு ஸ்ரீஜா என்றும் பெயர் சூட்டி இருக்கிறார்.
இறந்துவிட்ட தனது பள்ளி கால நண்பன் சூர்யா நினைவாக தான் விஜய் சேதுபதி தன் மகனுக்கு சூர்யா என பெயர் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
13 வயதில் நம்மவர் ஆடிக்ஷன்
விஜய் சேதுபதி 13 வயதிலேயே கமலின் நம்மவர் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்று இருக்கிறார். ஆனால் அவர் பார்க்க சின்ன பையன் போல இருப்பதால் அவரை வேண்டாம் என நிராகரித்துவிட்டனர். விஜய் சேதுபதியின் நண்பர்கள் பலரும் அதில் தேர்வாகி படத்தில் நடித்தார்களாம்.
அப்போது ரிஜெக்ட் ஆனாலும் விஜய் சேதுபதி தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் படமே 3 தேசிய விருதுகள்
விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கு மொத்தம் மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது, சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகை விருது மற்றும் 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்காக வைரமுத்துக்கு சிறந்த பாடலாசிரியர் விருது.
டிவி ஷோ
2006ல் விஜய் சேதுபதி பெண் என்ற டிவி ஷோவில் பங்கேற்றார். அது சுமார் 195 எபிசோடுகள் ஒளிபரப்பானது. மேலும் சன் டிவியில் மாஸ்டர் செஃப் ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.