நடிக்க வரும் முன் பட்ட கஷ்டங்கள்! விக்ரம் பற்றி இந்த விஷயம் எல்லாம் தெரியுமா
விக்ரம் தற்போது தான் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோ, அவர் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள் மற்றும் தோல்விகள் ஏராளம். நான் பல தோல்விகளை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என அவரே பல முறை கூறி இருக்கிறார்.
விக்ரம் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பார்க்காலம்.
நிஜ பெயர்
விக்ரமின் நிஜ பெயர் கென்னடி ஜான் விக்டர். 1966ல் பிறந்த விக்ரமுக்கு தற்போது 56 வயதாகிறது.
கஷ்டங்கள்
விக்ரமின் அப்பா சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என்று தான் தீவிரமாக முயற்சித்தாராம். ஆனால் அவரால் சின்ன ரோல்களில் மட்டுமே நடிக்க முடிந்தது. அதனாலேயே விக்ரமுக்கும் அதே சினிமா கனவு தான்.
படிப்பு
விக்ரமை டாக்டர் ஆக்க வேண்டும் என்று தான் பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் +2ல் மார்க் குறைந்ததால் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை, டென்டல் முயற்சித்தாலும் கிடைக்கவில்லை. அதன் பின் வேறு வழி இல்லாமல் சென்னையில் லயோலா கல்லூரியில் ஆங்கில literature படிக்க தொடங்கினார்.
காதல் திருமணம்
விக்ரம் 1980ல் விபத்தில் தனது கால் உடைந்த நிலையில் மூன்று வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவரை சந்திக்க வந்த ஷைலஜா உடன் காதல் ஏற்பட்டது. விக்ரம் கஷ்டத்தில் இருக்கும் காலத்தில் இருந்தே அவர் உடன் இருந்திருக்கிறார்.
அதற்கு பின் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.கேரளாவில் குருவாயூரில் திருமணம் நடந்தது. அதன் பின் சர்ச்சில் இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டனர்.
மனைவி
விக்ரமின் மனைவி சைலஜா சென்னையில் தற்போது ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.
7 வருடத்திற்கு மேல் பட்ட கஷ்டம்
விக்ரமிற்கு புகழ் எளிதில் கிடைக்கவில்லை. மாடலாக அறியப்பட்டாலும் அவருக்கு சினிமா எளிதில் வெற்றியை கொடுக்கவில்லை. அவர் ஏழு வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட நிலையில் சேது படம் தான் அவருக்கு முதல் பிரேக் கிடைத்தது.
அதற்கு பின் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் சியான் விக்ரம்.
Also Read: மீனாவின் அப்பா கொடுத்த ஷாக்! ரெஜிஸ்டர் ஆபிஸில் அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
