கட்டிப்பிடிக்கும்போது சட்டையில் நடிகையின் லிப்ஸ்டிக்.. பஹத் பாசில் கோபப்பட்டு கேட்ட கேள்வி
நடிகர் பஹத் பாசில் அவரது நடிப்பு திறமைக்காக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
விக்ரம் படத்தை தொடர்ந்து சமீபத்தில் வந்த மாமன்னன் படத்திலும் பஹத்தின் நடிப்புக்கு பாராட்டு குவிந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த அந்த படத்தில் பஹத் ஜோடியாக ரவீனா ரவி நடித்து இருந்தார்.

லிப்ஸ்டிக் பிரச்சனை
படத்தின் ஒரு காட்சியில் ரவீனாவை பஹத் பாசில் கட்டிப்பிடிக்கும் ஒரு சீன் இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும்போது பஹத் பாசில் சட்டையில் ரவீனாவின் லிப்ஸ்டிக் ஒட்டிக்கொண்டதாம்.
ஏற்கனவே தான் மேக்கப் போடவே மாட்டேன், என் லிப் கலரே அதுதான் என பஹத்திடம் ரவீனா கூறி இருந்தாராம். அதனால் பஹத் சட்டையில் லிப்ஸ்டிக் ஒட்டி இருந்ததை பார்த்து டென்சன் ஆகிவிட்டாராம். அப்போ பொய் தான் சொல்லி இருக்க என எல்லோர் முன்பும் கேட்டுவிட்டாராம்.
இந்த விஷயத்தை ரவீனா சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்! இப்படி ஒரு காட்சியா.. உறுதி செய்த பிரபலம்
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri