ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்! இப்படி ஒரு காட்சியா.. உறுதி செய்த பிரபலம்
ஜவான்
இயக்குனர் அட்லீயின் முதல் இந்தி திரைப்படமான ஜவான் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.
ஏற்கனவே வெளியாகி இருந்த ஜவான் படத்தின் டீசருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதனால் நிச்சய மாக படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் நடிப்பது உறுதியானது
இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் நடிப்பதாக முன்பிருந்தே கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதை பற்றி உறுதியான அறிவிப்பு இதுவரை படக்குழு வெளியிடவில்லை.
இந்நிலையில் தற்போது ஜவான் படத்தில் பணியாற்றி இருக்கும் ஹாலிவுட் புகழ் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் அளித்திருக்கும் பேட்டியில் தளபதி விஜய் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார்.
ஷாருக் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து ஒரு சண்டை காட்சியில் நடித்து இருக்கிரார்களாம். அந்த காட்சி நிச்சயம் எல்லோருக்கும் ட்ரீட்டாக இருக்கும் என அவர் கூறி இருக்கிறார்.
63 வயதில் அசரவைக்கும் வகையில் ஒர்கவுட் செய்யும் மோகன்லால்.. வீடியோ இதோ

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
