80 வயதிற்கு மேல் ஆகும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இது?- எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து நடித்த பிரபலங்கள் பலரும் இப்போதும் சினிமாவில் நடிக்கிறார்கள்.
ஆனால் சிலர் வயது காரணமாக சினிமா பக்கம் வருவதே இல்லை, அப்படி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. பி.எல். பட்டதாரி மற்றும் தொழில்முறை வழக்கறிஞரான இவர் ஜோதிடமும் பார்ப்பாராம்.
கமல்ஹாசன் நடித்த மாலை சூடவா படத்திற்கு திரைக்கதை எழுதியதே இவர்தானாம்.
தொடர்ந்து நடித்துவந்த இவர் முதுமையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.
பிறந்தநாள் புகைப்படம்
இந்த நேரத்தில் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது மனைவியுடன் 80வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால் அந்த புகைப்படம் இப்போது வந்தது போல் தெரியவில்லை, சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
