விஜய்யின் வாரிசு திரைப்படத்திலும் நடித்துள்ள இயக்குநர் வம்சியின் பிளாக் பஸ்டர் படங்களில் நடித்த பிரபலம் !
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் தீபாவளியில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்த வாரம் தான் வாரிசு திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வாரிசு புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஜெயசுதாவும் இருக்கிறார்.
நடிகை ஜெயசுதா இதுவரை இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்த யெவடு, மஹரிஷி, தோழா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. எனவே வாரிசு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அதிரடியாக வெளியான விஜய்யின் வாரிசு பட புதிய புகைப்படங்கள்