டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் தமிழ் சீரியல்கள் லிஸ்ட்
சினிமாவுக்கு இணையாக தற்போது டிவி சீரியல்களும் ஈடு கொடுக்க தொடங்கிவிட்டன. அதுவும் டிவி நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்தால் சினிமா நடிகர்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
தற்போது சின்னத்திரையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து அதிகம் ஃபேமஸ் ஆக இருக்கும் டாப் சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.
கயல்
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வரும் இந்த தொடர் தற்போது சின்னத்திரையில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
கயல் தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற சீரியல்கள் கயல் டிஆர்பி ரேட்டிங்கை முந்த போராடி வருகின்றன..
பாக்கியலட்சுமி
அப்பாவி மனைவி பாக்கியலட்சுமி, குடும்பத்தை பாசத்துடன் கவனித்துக்கொண்டு தனக்கென ஒரு தனி தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது கணவர் கோபி பாக்யாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால் தற்போது கோபியின் சுயரூபம் பாக்யா மட்டுமின்றி அவரது இன்னொரு காதலி ராதிகாவுக்கு தெரியவந்துவிட்டது. அதனால் தற்போது பரபரப்பான கட்டத்தை இந்த தொடர் எட்டி இருக்கிறது.
டிஆர்பியில் டாப் 5ல் தவறாமல் இடம்பெறும் இந்த சீரியல் விஜய் டிவியில் டாப் இடம் பிடித்து இருக்கிறது.
வானத்தைப் போல
அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ஆடியன்ஸ் பல்ஸை புரிந்துகொண்ட சன் டிவி கொண்டுவந்த தொடர் தான் வானதைப்போல.
தங்கைக்காக எதையும் செய்ய தயராக இருக்கும் அண்ணன் சின்ராசுக்கு, சுற்றி இருக்கும் உறவினர்களால் வரும் பிரச்சனைகள் தான் இந்த தொடரின் கதை.
இந்த தொடரும் ரசிகர்களிடம் அதிகம் பாப்புலராக இருந்து வருகிறது.
பாரதி கண்ணம்மா
கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. என்னதான் இந்த சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருந்தாலும், டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகள் பெற்று வந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து சில கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
பாரதி எப்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார், எப்போது தான் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்று சேர்வார்கள் என்பது தான் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.
சுந்தரி
சுந்தரி, கருப்பாக இருக்கும் பெண் என்பதாலேயே, அவரை திருமணம் செய்து கொள்ளும் கார்த்திக்கால் ஒதுக்கி வைக்கபடுகிறார். அதை எல்லாம் எதிர்த்து போராடி கலெக்டர் ஆக வேண்டும் என்கிற தனது கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதை தான் இந்த சுந்தரி சீரியல்.
இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் - 2022