2022 - இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
வருடம் தோறும் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பும், மார்க்கெட்டும் விரிவடைந்து வருகிறது. இதனால் தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெரிய வசூலை குவித்து வருவதை பார்த்து வருகிறோம். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி பல நடிகர்களின் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி தற்போது இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்க இருக்கிறோம்.
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்ப்புடன் கோலிவுட் திரைவுலகமே கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம். பல ஆண்டுகள் கழித்து கமல் திரைப்படம் வெளியானாலும் இதுவரை வெளியான திரைப்படங்களின் அனைத்து வசூலையும் முறிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
அந்த வகையில் விக்ரம் திரைப்படம் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தாண்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இன்னும் திரையரங்களில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பீஸ்ட்
எப்போதும் போல இந்தாண்டும் விஜய்யின் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் டாப்பாக வந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பீஸ்ட். அதிகமாக இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலையே பெற்றுள்ளது. அதன்படி விஜய்யின் பீஸ்ட் உலகளவில் மொத்தமாக ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வலிமை
அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை, பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளிவந்த வலிமை கலவையான விமர்சணங்களை அதிகமாக பெற்றது. மேலும் இப்படம் உலகமுழுவதும் மொத்தமாக ரூ, 200+ கோடிகள் வசூல் செய்துள்ளது.
டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் டான். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெளியான டான் சிவகார்த்திகேயனின் இரண்டாவது 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ.125 கோடிளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப திரைப்படமாக திரைப்படமாக உருவாகியிருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ,80 கோடியளவில் வசூல் செய்துள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல்
விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா என முதல்முறையாக முன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
FIR
விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் FIR. தில்லர் திரைப்படமாக வெளியான FIR மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 24 கோடியை வசூல் செய்திருக்கிறது.
வீரமே வாகை சூடும்
விஷால் நடிப்பில் இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியானது வீரமே வாகை சூடும். பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று ரூ. 23 கோடி வசூல் செய்திருக்கிறது.
தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் தளபதி 66 பட போட்டோஸ், செம கடுப்பில் ரசிகர்கள்..