தளபதி 67 திரைப்படத்திற்காக வெறித்தனமாக ரெடியான முக்கிய மலையாள நடிகர்! புகைப்படத்துடன் உறுதி செய்தாரா?
வம்சி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தளபதி 67
இந்நிலையில் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பெயர் அடிப்பட்டு இருக்கிறது.
ஆம், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பக்கத்தில் "Life time settlement for those who can master this selfie" என பதிவிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை குறிப்பிட்டு உள்ளதால் அவர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக் சொல்லப்படுகிறது.


நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா