அஜித்தின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.. வைரலாகும் விளம்பர புகைப்படம்
உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக ஏகே 64 படம் உருவாகவுள்ளது.

மேலும் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணத் திரைப்படம் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரம்
நடிகரும், கார் ரேசருமான அஜித், CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் நடித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் எழுப்பிய கேள்விகள்
விளையாட்டு வீரர்கள் பலரும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்கும் நிலையில், அஜித் நடிப்பது ஏன் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத அஜித், இதற்கு மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் ரசிகர்கள் கேட்கிறார்கள்.