விஜய்யை காண விமான நிலையத்தில் கூடிய ரசிகர்கள் கூட்டம்- கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்
நடிகர் விஜய்
தமிழ்நாட்டை தாண்டி விஜய்யின் கோட்டை என்றால் அது கேரளா தான். இங்கே விஜய்யின் படங்களுக்கு வரவேற்பை போல அங்கேயும் இருக்கும்.
தற்போது விஜய் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

மயக்கம் என்ன, ஒஸ்தி பட நடிகை ரிச்சாவை நியாபகம் இருக்கா?- திருமனம், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க
படத்தின் கிளைமேக்ஸ் காட்சி திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விஜய் கேரளா வருகிறார் என்பது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.
வைரல் வீடியோ
படப்பிடிப்பிற்காக விஜய் கேரளா வருகிறார் என்ற செய்தி வைரலாக பரவ அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறி வருகிறார்களாம்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெறும் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் கூடி இருப்பதாகவும் தெரிகிறது.
CROWD FLOWING to Trivandrum Airport to WELCOME their Anna #Thalapathy ???
— AB George (@AbGeorge_) March 18, 2024
Keralam welcomes their beloved Thalapathy Vijay.pic.twitter.com/xY8HW9jm2v

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
