இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசு.. அஜித் ரசிகர்களின் தரமான செயல்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நேற்று இப்படத்தின் டீசர் வெளிவந்த Youtube-ஐ அதிர வைத்துள்ளது. 24 மணி நேரம் ஆவதற்குலேயே 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
தங்க மோதிரம் பரிசு
குட் பேட் அக்லி படத்தின் டீசரை திரையரங்கில் ஒளிபரப்பு செய்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பரிசாக கொடுக்க, அஜித் ரசிகர்கள் 2 பவுன் தங்க மோதிரத்தை வாங்கி வைத்துள்ளார்களாம். குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்கு பின், இந்த தங்க மோதிரத்தை அவருக்கு வழங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல் News Lankasri
