பெண்களை மையப்படுத்தி வந்த படங்களில் அதிகம் வசூலித்த படங்கள்... டாப் 5 லிஸ்ட்
நாயகிகள்
எந்த ஒரு துறை எடுத்தாலும் அதில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது, பெண்களால் சாதிக்க முடியவில்லை என்ற நினைப்பு இருந்தது.
இப்போது அப்படி இல்லை பெண்களும் எல்லா துறைகளிலும் நாங்களும் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டி வருகிறார்கள். சினிமா மட்டும் விதிவிளக்கா என்ன இதிலும் பெண்கள் முன்னேற நிறைய தடைகள் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் முடியறிட்டு நாயகிகளும் சாதித்து வருகிறார்கள்.
டாப் படங்கள்
ஹீரோக்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துவந்த நேரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் படங்கள் சில நடித்து வெற்றிக்கண்ட நாயகிகள் உள்ளார்கள்.
அனுஷ்கா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா என பலர் ஹீரோ இல்லாமல் தங்களது கதாபாத்திரத்தை மையப்படுத்தி படங்கள் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள லோகா திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் விமேன் கதைக்களத்துடன் அதாவது சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
அப்படி பெண்களை மையப்படுத்தி வந்த கதைகளில் டாப் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ,
- Lokah (6 நாட்கள்)- ரூ. 93 கோடி
- மகாநதி- ரூ.84.5 கோடி
- ருத்ரமாதேவி- ரூ. 82 கோடி
- அருந்ததி- ரூ. 68. 5 கோடி
- பாகமதி- ரூ. 64 கோடி