சத்யராஜிக்கு ரஜினிகாந்த் மீது வெறுப்பு வர இது தான் காரணமா? இப்படி பண்ணிட்டாரே

By Dhiviyarajan Feb 01, 2023 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லனாக நடித்து மக்களை கவர்ந்தவர் தான் சத்யராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காவேரி நீர் பிரச்சனைக்காக தமிழ் நடிகர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். அப்போது மேடையில் பேசிய சத்யராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.

ஆனால் இதை குறித்து சத்யராஜிடம் கேட்டதற்கு, 'நான் ராஜினிகாந்தை தாக்கி பேசவில்லை' என்று கூறினார்.

சத்யராஜிக்கு ரஜினிகாந்த் மீது வெறுப்பு வர இது தான் காரணமா? இப்படி பண்ணிட்டாரே | Fight Between Rajinikanth And Sathyaraj

சத்யராஜ் - ரஜினிகாந்த்

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, சத்யராஜிக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட பிரச்னையை குறித்து பேசியுள்ளார்.

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியும் சத்யராஜும் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த பிறகு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் படத்தை போட்டு காட்டியுள்ளார். அப்போது படத்தை பார்த்த ரஜினி, " என்னை காட்டிலும் சத்யராஜிக்கு தான் பயங்கரமான காட்சிகள் அமைத்துள்ளது" என்று பாராட்டியுள்ளார்.

வெறுப்பு வர காரணம் 

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இப்படத்தில் 3 மணி நேரத்திற்கும் உள்ளதால், படத்தை 2.30 மணி அளவிற்கு குறைத்துள்ளார். இதனால் சத்யராஜ் நடித்திருந்த பல காட்சிகள் நீக்கப்பட்டது.

இதை அறிந்த சத்யராஜ் ," ஏன் என்னுடய காட்சிகளை நீக்கிவிட்டீர்கள்? என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர், " படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினிகாந்தின் காட்சியை நீக்க முடியாது. நீங்கள் நடித்திருந்த காட்சி கதைக்கு தேவையில்லாமல் இருந்தது. அதனால் தான் நீக்கினேன்" என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால் சத்யராஜ், இதற்கெல்லாம் காரணம் ரஜினிகாந்த் தான் என்று நினைத்து கொண்டாராம். இவ்வாறு தான் சத்யராஜிக்கு ரஜினி மேல் வெறுப்பு உண்டானதாம்.   

சத்யராஜிக்கு ரஜினிகாந்த் மீது வெறுப்பு வர இது தான் காரணமா? இப்படி பண்ணிட்டாரே | Fight Between Rajinikanth And Sathyaraj

மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US