ஒரு டீ போட இவ்ளோ பெரிய சண்டையா.. பிக் பாஸ் 6ல் வெடித்த பிரச்சனை
பிக் பாஸ் 6
போட்டியாளர்களுக்கு தற்போது பிக் பாஸ் கிளுப் ஹவுஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதற்காக 20 போட்டியாளர்களும் நான்கு அணிகளாக பிரிந்து தற்போது டாஸ்கில் பங்கேற்று வருகின்றனர்.
மறுபுறம் உணவு மற்றும் டீ தொடர்பாக வீட்டில் பிரச்சனை வெடித்து இருக்கிறது. அஸீம் மற்றும் VJ மகேஸ்வரி ஆகியோர் இடையே தான் பிரச்சனை முதலில் தொடங்கியது.
டீ-க்கு சண்டை
எனக்கு பால் டீ உடனே வேண்டும் என அஸீம் வந்து கேட்க, பால் பவுடர் கம்மியா இருக்கு, எல்லோருக்கும் போடும்போது தான் போடமுடியும் என கூறுகிறார் மகேஸ்வரி.
'அது என் உரிமை, நீங்க எப்படி அப்படி சொல்லலாம், நீங்க என்ன பிக் பாஸா' என அஸீம் சண்டைக்கு வர, மகேஸ்வரியும் அது பற்றி வாக்குவாதம் செய்கிறார் .
அதன் பின் கேப்டன் ஷிவின் எல்லோரையும் அழைத்து பழங்கள், பால் தொடர்பாக பேசுகிறார். அப்போதும் பெரிய வாக்குவாதம் நடக்கிறது.
ஒரு டீ போட இவ்ளோ பெரிய சண்டையா என்று தான் ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.
பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் சிவகார்த்திகேயன்?