சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக கைகலப்பில் ஈடுப்பட்ட பிரபல நடிகர்! என்ன காரணம் தெரியுமா
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜெயிலர் திரைப்படத்தில் புதிதாக இணைந்த நடிகர் குறித்து தகவல் பரவின. அதன்படி முக்கிய நடிகர் சரவணன் அப்படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.
நடிகர் சரவணன்
சரவணன் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது, ஆம் நடிகர் சரவணன் ஒன்பதாவது படிக்கும் போது சேலம் சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாராம்.
பிறகு அதே ரசிகர் மன்றத்திற்கு தலைவராகியுள்ளார். மேலும் ரஜினியின் திரைப்படம் ரிலீஸானால் அவர் தலைமையிலான கேங் அமர்களம் செய்வார்களாம். மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் கைகலப்பில் ஈடுப்படும் அளவிற்கு சரவணன் இருந்துள்ளாராம்.
அப்படியான தீவிர ரசிகர் சரவணன் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் தோல்வி படங்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா