நடிகர் ரஜினிகாந்தின் தோல்வி படங்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா.. வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒன்று
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால், இப்படத்தில் நடிக்கும் தமன்னா குறித்து இதுவரை படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்மை நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இதுவரை 168 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
தோல்வி படங்கள் சதவீதம்
இதில் பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்திருந்தாலும், சில திரைபடங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடியதில்லை.
இந்நிலையில், இத்தனை வருட திரை வாழ்க்கையில் நடிகர் ரஜினிகாந்தின் தோல்வி படங்களின் எண்ணிக்கை வெறும் 2% சதவீதம் தான் என்று பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
