15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஷங்கர் படத்தின் பிரமாண்ட பாடல் லீக்கானது.. கடும் அதிர்ச்சியில் படக்குழு
கேம் சேஞ்சர்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், சுனில் என திரையுலக பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட வரும் கேம் சேஞ்சர் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது என சமீபத்தில் தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
அதிர்ச்சியில் படக்குழு
இந்நிலையில், படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கேம் சேஞ்சர் படத்திலிருந்து அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடல் லீக்காகியுள்ளது. இந்த பாடலை ரூ. 15 கோடி செலவில் எடுத்துள்ளார்களாம்.
ஆனால், திடீரென இணையத்தில் இந்த பாடல் லீக்காகியுள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் வருத்தத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
