கேம் ஓவர்.. பிக் பாஸ் பிரதீப் அனைத்துக்கும் வைத்த முற்றுப்புள்ளி
பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் ரெட் கார்டு மூலமாக எலிமினேட் செய்யப்பட்டார்.
அவரை கடைசியாக எச்சரித்து விட்டிருக்கலாம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மிகைப்படுத்தப்பட்ட காரணத்தை கூறி எலிமினேட் செய்துவிட்டனர் என நெட்டிசன்கள் அப்போது இருந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதீப் ஆண்டனி மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர கண்டிஷன்கள் போட்டு பதிவிட்டு இருந்தார். அதனால் அவர் மீண்டும் ஷோவுக்கு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.
கேம் ஓவர்
இந்நிலையில் தற்போது 'கேம் ஓவர்' என குறிப்பிட்டு பிரதீப் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"கேம் ஓவர், ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட காளின்றவன் பிழைச்சிப்பான் சார். கெட்ட பையன் சார் அவன். வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வாங்கிவிட்டேன். நல்லா இருங்க" என பிரதீப் பதிவிட்டு இருக்கிறார்.
அதனால் பிரதீப் இனி பிக் பாஸ் வர போவது இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
