ஒரு படம் தயாரித்ததால் 5 உயிர்கள் போச்சு.. நடிகர் கஞ்சா கருப்பு கலக்கம்
நடிகர் கஞ்சா கருப்பு காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் பல படங்களில் நடித்து முன்னணி காமெடியனாக வளர்ந்தார்.
அவர் 2014ல் வேல்முருகன் போர்வேல்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் ஓடாததால் கஞ்சா கருப்பு தான் சேர்ந்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார்.
சொந்த வீட்டை விற்றுவிட்டு தற்போது வாடகை வீட்டில் பிழைக்க வழி இல்லாமல் வறுமையில் வாடுகிறது அவர் குடும்பம். அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன் என கஞ்சா கருப்பு விரக்தியாக பேசி இருக்கிறார்.
5 உயிர் போச்சு
சமீபத்தில் ஒரு பேட்டியில் கஞ்சா கருப்பு தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டாததால் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதை பார்த்து எனக்கு கண்ணீர் வருகிறது என எமோஷ்னலாக கூறினார்.
மேலும் தான் படம் தயாரித்ததால் குடும்பத்தில் ஐந்து உயிர்கள் போய்விட்டது என்றும் அவர் கூறி இருக்கிறார்.
அக்காவின் மகன், என் ஐயா, பாட்டி மற்றும் மாமா ஆகியோரை இழந்துவிட்டேன் என கஞ்சா கருப்பு கூறி இருக்கிறார்.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
