10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கட்டா குஸ்தி 2
சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான செல்லா அய்யாவு, இயக்கத்தில் அடுத்து வெளிவந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி. இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும், கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அதன்படி, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்' கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களில் உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
