7 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
கட்டா குஸ்தி 2
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி 2.

இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

நேற்று இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள். கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பிரம்மாண்டமான கார் ஒன்றை பரிசளித்து இருந்தார்.
வசூல்
பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது.

251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan